பெங்களூருவில் ஆட்டோவில் வந்த பெண் பயணியிடம், நீ தான் என் காம பசிக்கு பலியாடு என்று மிரட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுபி சிட்டியில் ஒரு பெண் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த திங்கள்கிழமையும் அப்பெண் வேலைக்கு சென்று பிறகு வேலை முடிந்த இரவு 7.15 மணிக்கு கோரமங்கலாவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் முதலில் அப்பெண்ணிடம் ரூ.100 கொடுத்தால் போது என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக அப்பெண்ணும், ஆட்டோவில் கிளம்பியுள்ளார். ஆனால், பாதி தூரம் சென்ற பிறகு ரூ.200 கொடுத்தால் தான் வீட்டிற்கு கொண்டு போய்விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு கொண்டீர்ருக்கும் "பாட்ஷா"

இதில் இருவருக்கும் விவாதம் நடந்துள்ளது. இதனால், ஆட்டோவிலிருந்து இறங்க முயன்ற அப்பெண்ணை, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நீ தான் என் காம பசிக்கு பலியாடு, நான் இதுவரை பலரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறேன் என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார். மேலும், அப்பெண் வைத்திருந்த பர்ஸையும் கைப்பற்றியுள்ளார். அதில் ரூ.300 இருந்ததாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த டாப்-5 டீசர்.!! இதோ உங்களுக்காக..

அவரிடமிருந்து தப்பிய அப்பெண் போக்குவரத்து போலீஸ் மற்றும் கப்பன் பார்க் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆட்டோ டிரைவர் மீது ஐபிசி 354 மற்றும் 392 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.