Connect with us

Cinemapettai

பந்தா பண்ணிய சஞ்சீவ் ஆலியா மானசா ஜோடி.. பொடனியில் அடித்து பத்திவிட்ட நெட்டிசன்கள்

alya-sanjeev-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பந்தா பண்ணிய சஞ்சீவ் ஆலியா மானசா ஜோடி.. பொடனியில் அடித்து பத்திவிட்ட நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் பேரும் புகழும் அடைந்தவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி. விஜய் டிவியில் சீரியல் நடிகர்கள் எப்போதுமே ரியல் லைப்பில் ஜோடி ஆகி விடுவார்கள் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் அவர்களின் காதலை ஏற்படுத்தி அவர்களை திருமணம் செய்துவைத்தது விஜய் டிவி. ஆலியா மானசாவுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பெயர் வைக்கும் விழா என்ற பெயரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் அந்த ஜோடி.

வீட்டு மொட்டை மாடியில் அந்த விழாவை நடத்தும் போது அரசு அறிவித்த எந்த ஒரு விதிமுறையும் கடைபிடிக்காமல் தனிமனித இடைவெளி எதுவும் இல்லாமல் குறைந்த பட்சம் மாஸ்க் கூட இல்லாமல் விழாவை கொண்டாடியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கூட்டமாக பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ள நிலையில் அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் இஸ்டத்திற்கு செய்ததால் தற்போது பல கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் கொரானா பாதிப்பு அதிகமாக இருப்பதால் நடிகர்களும் பொறுப்புணர்ந்து செயல்படாத நிலையில், அதிகாரிகள் அவர்களது வீட்டுக்குச் சென்று எச்சரித்ததாக தெரிகிறது.

இதனால் பந்தா பண்ணிய சஞ்சீவ், ஆலியா மானசா ஆகிய இருவரையும் பங்கமாக வைத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். பிரபலமான பிறகு இவர்கள் இருவரும் செய்யும் அட்டகாசம் சமீபகாலமாக பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top