Connect with us

வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ் ஆலியா.. இவர்களின் அந்த போதை தான் காரணமாம்

alya-sanjeev-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ் ஆலியா.. இவர்களின் அந்த போதை தான் காரணமாம்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் எதற்காக நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம் என்ற காரணத்தை வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர்.

அதாவது இந்த காலத்திலும் ஜாதி என்ற போதையினால் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, இதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சஞ்சீவ் பெற்றோர்கள் ஆலியா வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும், அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வெவ்வேறு ஜாதி, இது செட்டே ஆகாது என்பது போன்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா குடும்பமே வேண்டாம் என்று வெளியேறி காதல் திருமணம் பதிவு செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து மிக சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சஞ்சீவிவை காதலிப்பதற்கு முன்னதாக சதீஷ் என்பவரை காதலித்து வந்தார் என்பது ஊர் அறிந்த ஒன்றுதான். அவரின் பெயரை பச்சை குத்தி சர்ச்சையானது என்பது குறுப்பிடதக்கது.

குழந்தை பிறந்ததற்கு பின் மீண்டும் ஆலியா விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும், அதற்கு டிரைல் பார்த்துக் கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார், இதனால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top