Connect with us
Cinemapettai

Cinemapettai

alya-manasa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பென்ஸ், மினி கூப்பரை அடுத்து புதிய காரை வாங்கிய ஆலியா புகைப்படம்.. இன்னும் எத்தனை, லிஸ்ட் பெருசா போகுது.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறி உள்ளார் சீரியல் நடிகை ஆலியா மானசா. இவர் இந்தத் தொடரில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஆலியா, மீண்டும் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதைப்போல் சஞ்சீவ் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

இப்படி தங்களை பிஸியாக வைத்துக் கொள்ளும் ஆல்யா-சஞ்சீவ் தம்பதியர், கடந்த வருடம் பென்ஸ் காரை வாங்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆலியாவிற்கென்ற உருவத்தில் சிறிதாகவும், ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கும் 30 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் என்ற புது மாடல் காரை வாங்கினார்கள்.

alya-car-cinemapettai

ஆலியா இந்த காரை வைத்தே ‘கார் டூர்’ என்ற பெயரில் தன்னுடைய மினி கூப்பர் காரை பற்றி விளக்கமாக விவரித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு எக்கச்சக்க லைக்குகளை பெற்றார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய காரை ஆலியா சஞ்சீவ் வாங்கி உள்ளனர் அந்தக் காருடன் தங்களுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள், ‘இன்னும் எத்தனை கார் தான் வாங்க போறீங்க, லிஸ்ட் பெருசா போகுதே’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top