Tamil Nadu | தமிழ் நாடு
ஆல்யா மானசாவின் கல்யாணத்துக்கு பின் அடுத்த சீரியல்.. கும்முனு புகைப்படத்துடன் அறிவித்தார்
விஜய் டிவியின் பிரபல ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களை வளைத்துப் போட்டவர் ஆலியா மானசா. இவருக்கு தற்போது தான் குழந்தை பிறந்தது, அதே சீரியலில் நடித்த சஞ்சீவிவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு முன்னதாக சதீஷ் என்ற காதலருடன் இருந்தார், அதற்கு பின் ஒரு சில சர்ச்சையால் பிரிந்து சஞ்சீவி திருமணம் செய்து கொண்டார். ஆலியா முதலில் மானாட மயிலாட சீசன் 10 கலைஞர் டிவியில் கலந்து கொண்டார், பின்பு ராஜா ராணி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதுமட்டுமில்லாமல் ‘ஜூலியும் 4 பேரும்’ என்ற படத்திலும் ஆலியா மானசா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

alya-manasa-cinemapettai-1
தற்போது ஆலியா மானசா புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அடுத்த சீரியலுக்காக நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராஜா ராணி சீரியலை இயக்கிய பிரவீன் தான் இந்த சீரியலயும் இயக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், இதற்கு கணவர் சஞ்சீவ் ‘என்ன பப்பு சஸ்பென்ஸை உடைத்துட்ட’ என்று பதிலளித்துள்ளார்.

alya-manasa-cinemapettai-2
