Connect with us
Cinemapettai

Cinemapettai

alya-makapa

Videos | வீடியோக்கள்

ராஜா ராணி- 2 சீரியலை வச்சு செய்த மாகாபா.. இது என்னடா ஆல்யாவுக்கு வந்த சோதனை

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் ஷோவை இரண்டு சீசனாக பிரியங்கா தொகுத்து வழங்கினார். தற்போது பிரியங்கா பிக்பாஸில் இருப்பதால் மாகாபா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் ஆறு பிரபலங்களை இரு அணிகளாகப் பிரித்து, அவர்களுக்கு இசை சம்பந்தமான போட்டிகள் நடத்தப்படும்.

இந்த வார ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 தொடரில் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். ராஜா ராணி2 தொடர் முதலில் மந்தமாக சென்றாலும் தற்போது சமையல் போட்டி என விறுவிறுப்பாக செல்கிறது. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ஆல்யா மானசா, சித்து, வைஷ்ணவி ஒரு அணியாகவும் விஜே அர்ச்சனா, பாலாஜி, பிரதோஷ் மற்றொரு அணியாக விளையாடுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாகாபா ராஜா ராணி2 சீரியலை மிகவும் வருத்த எடுக்கிறார். இத்தொடரின் பெயரை மாமியார்-மருமகள் என்று வைத்திருக்கலாம் ஆனால் ராஜா ராணி என வைத்திருக்கிறார்கள் என கலாய்த்தார். இந்த நிகழ்ச்சியில் இரு அணியும் மோதிக் கொள்ளும் படி ஆலியா ஸ்வீட்டையும், அர்ச்சனா துணிகளையும் மேடையில் விற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஒரு சுற்றில் ராகத்தை வைத்து பாடலின் வரிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதில் காதலன் திரைப்படத்தில் உள்ள பேட்ட ரேப் பாடலின் இசை ஒலிக்கப்படுகிறது. இப்பாடலை கண்டுபிடித்த ஆல்யா பாடலின் வரிகளை தவறாக பாடினார். அதைக்கேட்ட மாகாபா ஆல்யாவை வச்சி செய்தார். இதனால் இந்த வார எபிசோட் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

Continue Reading
To Top