நாம் பார்க்க இருக்கும் செய்தி மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் தயாரிக்கும் முதல் படம் பற்றியது.

alphonse putharen
ALPHONSE PUTHIRAN

அல்போன்ஸ் புத்திரன்

இந்த பெயர் இந்தியா சினிமாவில் பிரபலமான ஒன்று. முதல் படம் ‘நேரம்’ தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான படம், கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. இரண்டாவது படம் ‘ப்ரேமம்’ மலையாளத்தில் மட்டும் வெளிவந்தாலும் எல்லா ஸ்டேட்களிலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்களை தியேட்டர் நோக்கி செல்ல வாய்த்த படம்.

premam-actress

பிரேமம்; வெளியாகி கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியயுள்ள நிலையில் இவரது அடுத்து இயக்கம் படம் பற்றிய அறிவிப்பு இன்னமும் வரவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

premam

இந்நிலையில் இவர் தன் பேஸ் புக்கில் தான் தயாரிக்கும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பர் மோசின் காசிம் இயக்கத்தில் ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களில் நடித்த சிஜூ வில்சன், ஷரஃபுதின், கிருஷ்ணா ஷங்கர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவரின் முந்தய இரு படங்களுக்கும் இசையமைத்த ராஜேஷ் முருகேசனே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

#Thobama #alphonseputhiran #FLP #FirstLook #Poster #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இப்படத்திற்கு “தோபாமா” என பெயர் வைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அல்ஃபோன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

 

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

thobama

மேலும் இப்படத்திற்கான ஹீரோயின் தேடுதலில் இறங்கியுள்ளது படக்குழு. மேக் அப் இல்லாமல், போட்டோ ஷாப் செய்யாமல் உள்ள போட்டோவை இந்த முகவரிக்கு அனுப்புமாறு கோரியுள்ளனர் [email protected] 17 – 25 வயது. அழகான, அறிவான, தைரியமான மற்றும் மலையாளம் பிடித்த பெண் தான் இவர்களுக்கு தேவையாம்.