Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களை குழம்ப வைக்கும் அட்லி ஷாருக்கான்.. படம் வருமா? வராதா?
தமிழ் சினிமாவில் பக்கா கமர்ஷியல் டைரக்டர் என பெயர் எடுத்தவர் அட்லீ. இதுவரை அட்லீ இயக்கிய 4 படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது.
இதனால் அட்லீ அடுத்து யார் இயக்கப் போகிறார் என கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் அட்லீக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த படத்திற்கான கதை அமைப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
முதலில் அட்லீ சொன்ன கதை ஷாருக்கானுக்கு திருப்தி இல்லை என செய்திகள் வெளிவந்தன. இதனால் படம் கைவிடப்பட்டதாகவும் பல செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் அட்லீ சொன்ன கதையில் ஷாருக்கான் சில திருத்தங்களைச் சொன்னதாகவும் அதை சரி செய்ய வேண்டி இவ்வளவு நாட்கள் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஷாருக்கானுடன் ஒரு விழாவில் கலந்து கொண்ட அட்லீ, விரைவில் ஷாருக்கானை இயக்கப் போகிறார் என்பதை உறுதி செய்துள்ளார். இதனை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு டுவிட்டரில் தளபதி ரசிகர்கள் மற்றும் சாருக்கான் ரசிகர்கள் நட்பு பாராட்டியதை பார்க்க முடிந்தது அனைவரும் அறிந்ததே.
