சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

TVK தலைவர் விஜய்யைவிட அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம்.. மிரண்டு போன சினிமாத்துறை

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா தி ரூல். புஷ்பா படத்தின் 2வது பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை சுகுமாரே இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பக்த்பாசில், ஸ்ரீதேஜ், ஸ்ரீலீலா அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.500 கோடி செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்பட த்தின் முதல் லுக் போஸ்டர், டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்பட த்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, இப்பட த்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று புஷ்பா 2 பட த்தின் டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்து. அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டிரெயிலர் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது.

தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுவதாக கூறப்படும் நிலையில், இப்பட டிரெயிலர் தமிழில் நேற்று தாமதமாகத் தான் வெளியானது. இதற்கு ரசிகர்கள் விமர்சித்தனர்.

புஷ்பா ட்ரெயிலர் வெளியான சில மணி நேரங்களிலேயே தெலுங்கு, இந்தியில் டிரெண்டிங் ஆனது. இந்த டிரெயிலர் வெளியான 23 மணி நேரத்தில் தெலுங்கில் 4.4 கோடி பார்வைகளையும், தமிழில் 51 லட்சம் பார்வைகளையும், இந்தியில் 4.7 கோடி பார்வைகளையும் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அரசியல் மாநாட்டை விஞ்சிய புஷ்பா 2 டிரெயிலர் வெளியீட்டு விழா!

இதற்கிடையே, நேற்று புஷ்பா 2 பட டிரெயிலர் வெளியீட்டு விழா பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதற்காக அரசியல் மாநாடு போல் பிரமாண்ட திடலும், வண்ண விளக்குகளும், மேடையும், திரையும் அமைக்கப்பட்டிருந்தன. அப்போது, கூடிய ரசிகர்களின் கூட்டம் ஒரு அரசியல் கட்சி மாநாட்டை விஞ்சும் அளவுக்கு களைகட்டியிருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அம்மாநில அரசு மற்றும் அதிகாரிகள் பரபரப்புக்கு உள்ளாயினர்.

சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மா நாட்டுக்கு வி.சாலையில் கூடிய கூட்டம் போல் புஷ்பா 2 டிரெயிலரை பார்க்க கூடிய கூட்டம் ஒட்டுமொத்த சினிமா துறையினரையும் பேசவைத்துள்ளது. நிச்சயம் இப்படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என கூறப்படுகிறது.

pushba 2
pushba 2
- Advertisement -

Trending News