Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதிக்கு பதிலாக புதிய வில்லன் இந்த சீன் பார்ட்டி நடிகரா? அல்லு அர்ஜுன் படத்தில் கிடைத்த அட்டகாச வாய்ப்பு!
விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் இல்லாமல் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அந்த வகையில் அவர் வில்லனாக நடித்து அடுத்த வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் ஐந்து மொழிகளில் உருவாகும் புஷ்பா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக முதலில் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்காக சில பல கோடிகள் சம்பளம் பேசி இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக நேரிட்டது.

vijay-sethupathi-cinemapettai
இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் பாபி சிம்ஹா, பெரிய பட வாய்ப்பு வந்தவுடன் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் சம்பளம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அல்லு அர்ஜுன் படக்குழுவினர், என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் பாபி சிம்ஹாவுக்கு சீன் பார்ட்டி என்ற பெயர் உண்டு.
தன்னைத்தானே பெரிய ஆள் போல் நினைத்துக் கொண்டே ஹீரோவாக நடித்த பல படங்கள் மண்ணை கவ்வி தற்போது மார்க்கெட் இல்லாமல் தடுமாறி வருகிறார்.
