திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ட்ரெய்லரிலேயே மாஸ் காட்டிய புஷ்பா 2.. ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு சாதனையா?

Pushpa 2: சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த படம் முதல் பாகமே யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

2,3 முறை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஒரு வழியாக டிசம்பர் 5ஆம் தேதி என முடிவாகி இருக்கிறது. ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே யானை பிளிருவது காட்டப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து வெளிவரும் குரலில் யார் இந்த புஷ்பா, பணத்து மேலயும் மரியாதை இல்லை , பவர காட்டவும் பயமில்லை என்று ஆரம்பிக்கிறது.

மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்

அதை தொடர்ந்து புஷ்பா பேரு தான் சின்னது, ஆனால் பயங்கரமான வெயிட்டாக இருக்கிறது என சொல்கிறார்கள். அதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் பயங்கர மாசாக புஷ்பா கேரக்டரில் வந்து நிற்கிறார். அதன் பின்னர் அல்லு அர்ஜுன் குரலில் ஸ்ரீ வள்ளி என் பொண்டாட்டி, பொண்டாட்டி பேச்சை கேட்டா என்ன நடக்கும்னு இந்த உலகத்துக்கு நான் காட்ட போறேன் என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவின் சீன் ஒரு இரண்டு செகண்டிற்கு காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து ஹரே தீவானா என்ற இந்தி பாடலுடன், மொட்டை தலை பகத் பாசில் என்ட்ரி கொடுக்கிறார். முதல் பாகத்தில் பார்ட்டி இல்லையா புஷ்பா என்று கேட்கும் இவர், இந்த ட்ரெய்லரில் பார்ட்டி இருக்குது புஷ்பா என்று சொல்கிறார்.

இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த ட்ரெய்லர் வீடியோ ஒரே நாளில் 100 மில்லியன், அதாவது 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

Trending News