புதன்கிழமை, நவம்பர் 6, 2024

சொல்லி அடிச்ச அல்லு அர்ஜூன்.. பல டாப் ஹீரோக்கு தலைவலியான புஷ்பா 2

புஷ்பா 2 படத்தின் பிரீ பிசினஸ் மட்டும் இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில் அதிகத் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி மொத்த சினிமாவுட்டையுமே அதிர வைத்துள்ளது. இதனால் மற்றா ஹீரோஸ் எல்லாம் இந்த பிஸினஸை டார்க்கெட்டை முறியடிக்க முடியுமா? என யோசித்து வருகின்றனர்.

புஷ்பா

டோலிவுட்டின் ஸ்டைலிஸ் ஸ்டார் அல்லு அர்ஜூன். இவர், நடிப்பில் சுகுமர் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான படம் தான் புஷ்பா. புஷ்பானா பூவுன்னு நினைச்சியா. ஃபையரு என்ற வசனமும், சாமி, ஓ சொல்றியா மாமா என்ற பாடல்களும் பெட்டிதொட்டி எல்லாம் வெகு பிரபமனானது. இப்படம் ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ.360 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

டோலிவுட் சினிமாவில் பாகுபலி படத்திற்கு பின் அதிக வசூல் குவித்த படமாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையெடுத்து, அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராக இப்படத்தின் மூலம் உருவெடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து வைத்ததால் கொண்டாடி தீர்த்தனர். இப்படத்தின் நடித்ததற்காக தெலுங்கு சினிமாவின் முதல் தேசிய விருது பெற்றார் நடிகரானார் அல்லு அர்ஜூன்.

புஷ்பா -2

இப்படி பல சிறப்பம்சங்களும், சாதனைகளும் படைத்த புஷ்பா படத்தின் 2 வது பாகம் உருவாகி வந்த நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் டீசரும், 2 பாடல்களும் வெளியாகி வைரலானது. அதன்பின், இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது.இப்படத்தின் அனைத்து ஷூட்டிங், போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு திட்டமிருந்தது.

ஆனால், சில காரணங்களால் படக்குழு வரும் டிசம்பர் 6 ஆம் தேதி படத்தை ரிலீச் செய்வதாக அறிவித்தனர். ஏற்கனவே முதல் பாகம் டிசம்பரில் ரிலீசானதால் 2 வது பாகமும் டிசம்பரில் வெளியிட செண்டிமெண்ட் காரணமா? எனக் கேள்வி எழுந்தன. இந்த நிலையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவித்து அவரது முந்தையை சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரூ.900 கோடிக்கு பரீ பிசினஸ்

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீ பிசினஸ் மட்டும் 900 கோடி ரூபாய்க்கு மேல் நடந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. அதன்படி, ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ப்ற்றுள்ளது. அதனால் அந்த நிறுவனம் ரூ.270 கோடிக்கு உரிமையைப் பெற்றதாகவும், டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் உரிமை , ஆடியோ உரிமை என எல்லாவற்றையும் சேர்த்து இப்படம் ரூ.650 கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாகவும் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் இன்னும் பல கோடி லாபம் கிடைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன் ராம்சரண்- ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரூ.900 என கூறப்பட்ட நிலையில் இப்படத்தின் பிசினஸ் ரெக்கார்டை அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் முறியடித்துள்ளது. இந்த நிலையில் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பரீ பிசினஸில் புதிய பென்ச் மார்க்கை அல்லு அர்ஜூனின் புஷ்பா வைத்துள்ளதால் இந்த ரெக்கார்ட் மற்ற ஹீரோக்களுக்கு இலக்காகவும் மாறியுள்ளாதாகவும், இதை தாண்டி தங்கள் படங்கள் பிசினஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News