வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

எதிர்ப்புகளை சந்தித்த புஷ்பா படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனம்

முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பின்னர் தான் பிரச்சனைகளை சந்திக்கும். ஆனால் சமீபகாலமாகவே ஒரு படம் வெளியாகும் முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பல தடைகளை தாண்டி தான் திரையரங்கில் வெளியானது. ( Pushpa Movie Twitter Review )

pushpa-twitter-review-second-half
pushpa-twitter-review-second-half
pushpa-movie-twitter-review-1
pushpa-movie-twitter-review-1

தற்போது அந்த வரிசையில் தெலுங்கு படமான புஷ்பா படமும் இணைந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரபல இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் புஷ்பா. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. இதன் முதல் பாகம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

pushpa-movie-twitter-review
pushpa-movie-twitter-review

இதுவரை எந்தவொரு பான் இந்தியா படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு புஷ்பா படத்திற்கு கிடைத்துள்ளதாம். காரணம் முன்னதாக வெளியான படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் படத்தில் டாப் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளதும் முக்கிய காரணமாகும்.

pushpa-movie-twitter-review
pushpa-movie-twitter-review

இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், அதையெல்லாம் தாண்டி தற்போது படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆந்திராவில் பல இடங்களில் படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லையாம். அந்த அளவிற்கு ஹவுஸ்புல் காட்சிகளாக புஷ்பா படம் ஓடி கொண்டிருக்கிறது.

pushpa-movie-twitter-review
pushpa-movie-twitter-review

படம் பார்த்தவர்களும் படம் வேற லெவலில் இருப்பதாகவே கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் கெரியரில் புஷ்பா படம் ஒரு திருப்புமுனையாக இருக்குமாம். அந்த அளவிற்கு நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளாராம் அல்லு அர்ஜுன். மொத்தத்தில் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் தான் தற்போது வரை கிடைத்து வருகிறது.

pushpa-movie-twitter-review-1
pushpa-movie-twitter-review-1
- Advertisement -spot_img

Trending News