புஷ்பா படமும் ரசிகர்களின் கருத்தும்… என்ன கூறியுள்ளார்கள்?

எப்போதுமே ஒரு இயக்குனரின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. காரணம் படத்தின் இயக்குனர் சுகுமார் இதற்கு முன்பு இயக்கிய ரங்கஸ்தலம் படம் மாபெரும் வெற்றி பெற்றது தான்.

அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுகுமார் மற்றும் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா படம் உருவானதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் தான் புஷ்பா படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் எப்படி உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கும் புஷ்பா என்ற கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பல் தலைவன் ஆகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதற்கு முன்பு நாம் பலமுறை பார்த்த அதே வழக்கமான டான், கேங்ஸ்டர் படங்களை போலதான் புஷ்பா படமும். இருப்பினும் தனது சுவாரஸ்யமான கதை மூலம் தொய்வு ஏற்படாமல் முதல் பாதி முழுக்க கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

முதல் பாதி மட்டும் தான் தொய்வு இல்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதி அப்படி அல்ல. மிகவும் மெதுவாக நகர்ந்து பார்ப்பவர்களை போர் அடிக்க செய்கிறது. அதுமட்டுமல்ல மலையாள நடிகர் பகத் பாசில் படத்தின் இறுதியில் தான் வருகிறார். அனேகமாக இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கான வலுவான கேரக்டர் இருக்கும் போலும்.

மற்ற ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் புஷ்பா படம் நிச்சயம் தெலுங்கு ரசிகர்களின் பேவரைட் படங்களின் லிஸ்டில் இணைந்திருக்கும். தெலுங்கு ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் தான் புஷ்பா. தமிழ் ரசிகர்கள் பெரும்பாலும் சமந்தாவின் குத்துப்பாட்டை காணவே சென்றிருக்கிறார்கள் போல.

படத்தின் நீளம் மிக அதிகம், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாகவும் சுவாரஸ்யம் இல்லாமலும் நகர்வது போன்ற ஒரு சில குறைகளை தவிர புஷ்பா படம் ஓவராலாக ஒரு சிறந்த எண்டர்டெயின்மென்ட் படமாகவே உள்ளது. குறைகளை சற்று தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் தாராளமாக படத்தை ரசித்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்