ALLU ARJUN

மிலிட்டரி ஆஃபீசராக அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழ், , கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற தலைப்பில் மே மாதம் 4ஆம் தேதி வெளியாகிறது.

Allu Arjun

அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, சாரு ஹாசன், சாய் குமார், ஹரீஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சங்கர் இசையில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தமிழுக்கான வசனத்தை பாடலாசிரியர் பா விஜய்யும், இயக்குநர் விஜய் பாலாஜியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.