சமீபகாலமாகவே இந்திய படங்கள் அதுவும் குறிப்பாக தென்னிந்திய படங்களுக்கு வெளிநாடுகளில் அதிக மார்க்கெட் நிலவி வருகிறது. முன்னதாக இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படம் வெளிநாடுகளிலும் வசூலில் பட்டையை கிளப்பியது. தற்போது அந்த வரிசையில் புஷ்பா படமும் இணைந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் தான் புஷ்பா. செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் தான் இன்று வெளியாகியுள்ளது.
பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள புஷ்பா படத்திற்கு இந்தியாவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. காலை முதல் தற்போது வரை படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்களே கிடைத்து வருகிறது. நாளை காலை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பா படம் வெளியாகும் முன்பே அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி இன்று வெளியாகியுள்ள புஷ்பா படத்திற்கு அமெரிக்காவில் நேற்று முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே சுமார் $350 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாம். இந்த தகவலை திரையரங்கு உரிமையை பெற்றுள்ள Hamsini Entertainment தெரிவித்துள்ளது.
முன்பதிவிலேயே 2 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ள புஷ்பா படத்தின் வசூல் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமெரிக்காவில் இந்த அளவிற்கு புஷ்பா படம் வசூல் செய்துள்ளது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் பகத் பாசில் வரும் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த படம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பறந்து பறந்து விளம்பரம் செய்தது வீணாகிவிட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.