Reviews | விமர்சனங்கள்
அல்லு அர்ஜுனின் அட்டகாசம்- அல வைகுந்தபுறமுல்லோ திரைவிமர்சனம்
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெகிடே, நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, ஜெயராம், தபு, நவதீப், வெண்ணிலா கிஷோர், சுஷாந்த, சுனில், ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தி முன்னிட்டு வெளியாகி உள்ள ஆக்ஷன் பேமிலி ட்ராமா படம்.
கதை- ஜெயராம், முரளி சர்மா ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். ஓனர் பெண் தபுவை திருமணம் செய்து முதலாளி ஆகிறார். ஒரே சமயத்தில் ஒரே ஹாஸ்பிடலில் குழந்தை பிறக்க குழந்தைகளை மாற்றி விடுகிறார் முரளி சர்மா. ஜெயராம் மேல் உள்ள கடுப்பை தன்னிடம் உள்ள மகனிடம் காட்ட; அங்கு பணக்காரனாக வளரும் தன் மகனை ரசித்து வருகிறார்.
அல்லு அர்ஜுன் வேலைக்கு செல்ல அங்கு பூஜாவுடன் காதல் என செல்கிறது படம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயராம் உயிரை காப்பாற்ற மருத்துவமனைக்கு செல்ல, நாயகனுக்கு நர்ஸ் வாயிலாக உண்மை தெரிய வருகிறது.
பின்னர் தன் நிஜ அப்பா- அம்மா சந்தோஷமாக வாழ, அவர்கள் குடும்ப பிரச்னையை தீர்க்க வில்லன் சமுத்திரக்கனி ஆட்களை அடித்து துவம்சம் பண்ண கமெர்ஷியல் கலாட்டாவாக படம் முடிகிறது.
சினிமாபேட்டை அலசல்– தனி ஆளாக அல்லு அர்ஜுன் படத்தை சுமக்கிறார். நம் ஹீரோவின் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இப்படம். லாஜிக் ஒதுக்கிவிட்டு காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவை. பொங்கல் பண்டிகை சமயத்தில் குடும்பத்துடன் சென்று பார்க்க சூப்பர் மசாலா எண்டெர்டைனர் இப்படம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – அக்மார்க் தெலுங்கு படம். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி சென்றால் திருப்த்தி நிச்சயம் கிடைக்கும்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3/5
