இளைய தளபதி விஜயை பின்பற்றி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவர் நடித்து வந்த ’துவ்வுடா ஜகந்நாதம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ‘நா பேரு சூர்யா’ என்ற படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வக்கந்தம் வம்சி இயக்க உள்ளார்.

இயக்குநர் வம்சி, இதற்கு முன்னர் அதிதி, கிக்,டெம்பர், கிக்-2 ஆகிய வெற்றிப் படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றியவர். இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் பிரம்மாண்ட போர்க்கள காட்சி ஒன்றும் இடம்பெற உள்ளதாம்.

இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ராஷ்மிகா மாதன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தேசிய உணர்வை அடிப்படையாக கொண்டு, இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தென்னிந்திய கதாநாயகர்களும்,ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.