Connect with us
Cinemapettai

Cinemapettai

allu-arjun-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் அல்லு அர்ஜுன்.. பதட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வந்த புஷ்பா படப்பிடிப்பில் இருந்து திடீரென அல்லு அர்ஜுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கும் பிரபலமான மற்றும் பிடித்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் படங்கள் தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான அளவைகுண்டபுரமுலோ படத்தைக்கூட சன் டிவி வைகுண்டபுரம் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டது.

தமிழ் சினிமாவில் டிஆர்பி கிங் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் சவால் விடும் வகையில் அந்த படம் அமைந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளிலும் புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென அல்லு அர்ஜுனுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அல்லு அர்ஜுன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் தன்னை யாரேனும் சந்தித்திருந்தால் உடனடியாக அவர்களை கொரானா டெஸ்ட் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.

allu-arjun-cinemapettai

allu-arjun-cinemapettai

Continue Reading
To Top