fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஆபாச காட்சி.. இதுக்கு பேரு தான் லவ் சீன்-ஆ?

pushpa

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஆபாச காட்சி.. இதுக்கு பேரு தான் லவ் சீன்-ஆ?

சமீப காலமாக படங்களில் காதல் காட்சிகளை பார்க்கும்போது அது காதல் காட்சிகளாக இல்லாமல் காமகாட்சிகள் ஆக மாறிவிட்டது என்பது தான் உண்மை. அதுவும் முன்னணி நடிகர்களின் படங்களில் அந்த மாதிரி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து உருவாகி வெளியான திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து அந்த பாடலுக்காகவே ரசிகர்கள் திரையரங்குக்கு வரும்படி ஆகிவிட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் காட்சி ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரு காருக்குள் ரொமான்ஸ் செய்யும் காட்சி இருந்தது. அந்த காட்சியில் காதல் என்ற பெயரில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனாவின் மேல் பகுதியில் கைவைத்து இருப்பதுபோல் அந்த காட்சி எடுக்கப்பட்டு இருந்தது.

rashmika-1

rashmika-1

அந்த காட்சியை அப்படியே விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அந்தக் காட்சியில் வசனம் வைக்கிறேன் என டபுள் மீனிங்கில் இருந்ததும் அந்த காட்சி எடுக்கப்பட்ட விதமும் குடும்ப ரசிகர்கள் எப்படி இந்த படத்தை பார்க்க முடியும் எனும் அளவுக்கு நிறைய எதிர் கருத்துக்களை பெற்று வருகிறது.

rashmika

rashmika

இது படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிடும் என்பது தெரிந்து உடனடியாக படக்குழுவினர் அந்த காட்சியை குறிப்பிட்ட மொழிகளில் நீக்கி விட்டார்களாம். மேலும் இந்த மாதிரி காட்சிகள் வைப்பதற்கு பதிலாக பேசாமல் ஆபாச படம் எடுத்து விடலாம் என்கிற அளவுக்கு அந்த காட்சியை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top