புஷ்பா படம் எப்படி இருக்கு.? அரேபியாவிலிருந்து வெளிவந்த விமர்சனம்

பாகுபலி படத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இரண்டு தெலுங்கு படங்கள் என்றால் அது புஷ்பா மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் தான். இதில் புஷ்பா படம் வரும் 17 ஆம் தேதி ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா புஷ்பா படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதே அளவிற்கு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. காரணம் இந்த பாடலில் ஆண்கள் சமுதாயத்தை அவமதிக்கும் விதத்தில் வரிகள் இருப்பதாக கூறி ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இருப்பினும் படம் மீதான எதிர்பார்ப்பு சற்றும் குறையாமல் தான் உள்ளது. இந்நிலையில் படம் தொடர்பான முதல் விமர்சனம் அரேபியாவில் இருந்து வெளியாகியுள்ளது. என்னடா இது இன்னும் படமே வெளியாகல அதுக்குள்ள எப்படி விமர்சனம்னு தான நினைக்கிறீங்க.

பிரபல திரைப்பட விமர்சகரும் ஓவர்சீஸ் சென்சார் ஆணையத்தின் உறுப்பினருமான உமையர் சந்து அரேபியாவில் புஷ்பா படத்தை பார்த்து விட்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “புஷ்பா படத்தை ஃபர்ஸ்ட் ஆஃப் வேற லெவலில் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சென்சார் போர்டுடன் இணைந்து முழுபடத்தையும் பார்த்து விட்டு முழு விமர்சனத்தையும் வெளியிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

படம் வெளியாகும் முன்பே படத்தை பார்த்து விட்டு விமர்சனம் செய்துள்ள உமையர் சந்தின் டிவிட்டர் பதிவு இணையத்தில் டிரண்டாகி வருகிறது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பை இந்த பதிவு இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்