Connect with us
Cinemapettai

Cinemapettai

allu-arjun-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல மாஸ் இயக்குனருடன் கைக்கோர்த்த ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.. படம் டபுள் மாஸா இருக்கப் போகுது!

சமீபகாலமாக அல்லு அர்ஜுன்(allu arjun) படங்கள் தெலுங்கு சினிமாவில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பெருமளவு வசூலை குவித்து வருகிறது. அதை விட அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் நடிகர் விஜய்க்கு எப்படி கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் அல்லு அர்ஜுனுக்கும் கேரளாவில் மிகப் பெரிய மார்க்கெட்டும் ரசிகர் பட்டங்களும் உண்டு.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த அளவைகுந்தபுற்றமுளோ படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதனால் தனது அடுத்தடுத்த படங்களை இனி ஐந்து மொழிகளில் செய்வது என முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் புஷ்பா படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு தற்காலிகமாக AA21 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

allu-arjun-AA21-cinemapettai

allu-arjun-AA21-cinemapettai

இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் பெருமளவு அதை ரசிப்பதை இணையதளங்களில் பார்க்க முடிகிறது.

முதல் முறையாக அல்லு அர்ஜுன் படம் 5 மொழிகளில் உருவாகும் புஷ்பா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top