ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவை பரிந்துரைத்திருந்தது. மத்திய அமைச்சரவையின் அந்த பரிந்துரையை இன்று சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற மனித உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாகவும் கருதி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அதிகம் படித்தவை:  இயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி! காரணம் குறித்து போலீஸ் விசாரணை

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். எனினும் தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி பெற்றது. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடந்தது. விலங்குகள் நல அமைப்பு மீண்டும் தொடர்ந்த பொது நல வழக்கால் 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினரும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும் என ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அமைச்சரவை சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் செய்த ஒரே தவறு இதுதான்! நடிகர் RJ பாலாஜி

தற்போது இந்த பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழ்ங்குவது குறித்த புதிய மசோதாவை அறிமுக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா நிறைவவேறும் பட்சத்தில் தமிழகத்தில் பொங்கல்பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.