Connect with us
Cinemapettai

Cinemapettai

stalin-kamal

Tamil Nadu | தமிழ் நாடு

எதிர்க்கட்சியுடன் கூட்டணி வைத்த மக்கள் நீதி மையம்.. இத்தனை இடங்களா என்ற அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்.?

தமிழகத்தில் வரும் மே மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எதிர்க்கட்சியான திமுக கட்சியுடன் உலகநாயகன் கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யம் கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு 25 இடங்கள் திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் இணைந்திருந்தாலும், திமுக வலுவிழந்துள்ளதால், கூட்டணிக் கட்சிகளை திமுக உடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

ஏனென்றால் அதிமுக வலுவான நிலையில் இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உணர்ந்தாலே திமுகவில் இணைந்துள்ளார் என்று திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் புதிதாக உருவாகி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது திமுக கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு தற்போது திமுக 25 இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதன் விளைவாக தற்போது காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கேட்க முடிவெடுத்துள்ளது.

kamal-mnm-1

kamal-mnm-1

ஆகையால் திமுகவில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வரும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கமலின் வருகையால் ஸ்டாலின் முற்றிலும் ஓரங்கட்டப் படுவார் என்பது திமுக மூத்த நிர்வாகிகளின் வருத்தம் ஆகும்.

அதைப்போல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும், திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிலவாது என்ற கலக்கமடைந்துள்ளனர்.

Continue Reading
To Top