டாப் ஹீரோக்களின் இடத்தை நிறப்ப சிம்பு போடும் புது கணக்கு.. ஹிட்டாக்க இப்படியும் ஒரு ரூட்டா!

Silambarasan : யார் சொன்னாலும் எனக்கு நான் ராஜா, தன் வழி தனி வழி என்று இருக்கும் சிம்புவின் அடுத்தடுத்த படங்களை பிரபல இயக்குனர்கள் இயக்கவுள்ளனர். இது பற்றிய தகவல் வெளியான வண்ணம் உள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்துவிட்டார். தனுஷ், சிவர்கார்த்திகேயனுக்கு எல்லாம் இனிமேல் போட்டியாக இருக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றப அவரது புதிய படங்களில் பிரபல இயக்குனர்களுடன் கூட்டணியமைத்துள்ளார்.

‘பத்து தல’ படத்திற்குப் பின், மணிரத்னத்தின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவி, திரிஷா உள்ளட்டோருடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படமும் சிம்புவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு இணைந்துள்ளதால் அவரது நடிப்பு திறமை இப்படத்திலும் வெளிப்படும் என தெரிகிறது.

அடுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர் நேஷனல் தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘சிம்பு48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையிலும் இன்னும் இப்படத்தின் அட்டேட் கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், இப்படம் எடுக்கப்படுமா என்பதே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையில் மீண்டும் ஒரு நடிகையுடன் காதல் உள்ளிட்ட கிசுகிசுக்கள் சிம்புவைச் சுற்றி வட்டமடித்தாலும், அவர் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து, ‘டைனோசரஸ்’ பட இயக்குனர் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘2018 ‘என்ற ஹிட் படம் கொடுத்த மலையாள பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல் புதிய தகவலாக, ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து, தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ என்ற படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

விரைவில் இப்படம் தொடங்கப்படும் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது. சினிமாவில் அவருக்குப் போட்டியான நடிகர்களே தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து, சம்பளத்தை பல கோடிகள் உயர்த்தி வரும் நிலையில், இனிமேல் பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்து தன் மார்க்கெட்டை ஸ்டடியாக்க சிம்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News