சென்னை: தொலைக்காட்சியிலிருந்து திரைப்படத்திற்கு வந்துள்ள நடிகர் ஜீவா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சோறு போட்டு சோம்பேறியாக தூங்க வைப்பதற்குப் பதில், மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகளை கொடுத்திருக்கிலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில். ‘பிக் பாஸ் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உண்பது, உறங்குவது, சண்டை போடுவது என்று இல்லாமல் மரம் நடுதல், குளங்கள் தூர்வாருதல் போன்ற நிகழ்வுகள் இருந்திருந்தால் அது சமூகத்திற்கு பயனுள்ளதாகவாது இருந்திருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இது ரியாலிட்டி ஷோ இல்லை, எழுதி வைத்து நடிக்கப்படும் நாடகம் என்று நெட்டிசன்கள் ஆதாரத்தோடு வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள கமல்ஹாசன் மீதும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து, திரைப்படத்திற்கு வந்துள்ள நடிகர் ஜீவாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது