Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியின் பிகிலை குறிவைக்கும் சன் டிவி.. அடுத்த லிஸ்டில் தல, தலைவர் வேறு
என்னதான் பொங்கல், தீபாவளி என்றால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தாலும் மாலையில் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கும் சுகமே தனிதான். ரசிகர்களை தாண்டி பண்டிகை விடுமுறைகளில் தியேட்டருக்கு செல்லும் குடும்பங்கள் குறைவுதான்.
அந்த ஒன்றை வைத்துக்கொண்டு தான் அனைத்து டிவி நிறுவனங்களும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் நம்பர் ஒன் சேனலாக இருப்பது சன் டிவிதான்.
அந்த வகையில் பொங்கல் விடுமுறையில் ஜனவரி 15ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த பிகில் திரைப்படம் பிரிமியர் ஆக போடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 16ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும், 17ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படமும்,18ஆம் தேதி அஜீத் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும், 19ஆம் தேதி தலைவர் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும் திரையிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் விஜய் டிவியில் கைதி திரைப்படமும் திரையிடப்படுகிறது.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
