Tamil Cinema News | சினிமா செய்திகள்
இளம் இயக்குனர்களை டார்கெட் செய்யும் முன்னணி நடிகர்கள்.. பரபரப்பில் கோலிவுட்
தமிழ் சினிமாவில் தற்போது திறமையான இயக்குனர்களுக்கு பஞ்சம் நிலவியுள்ளது. இன்னும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல டைரக்டர்களை கழித்து கட்ட முடிவு செய்துள்ளது தமிழ் சினிமா. முன்னணி நடிகர்களும் இளம் இயக்குனர்களை நம்புவதால் கமர்சியல் இயக்குனர்களுக்கு இனி டாட்டா சொல்ல வேண்டியதுதான்.
நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல திரைக்கதை அமைந்த படங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய ரசிகர்கள் புதியதை அதிகம் விரும்புவதால் கமர்சியல் படம் எடுக்கவே நடிகர்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.
அந்த வகையில் இளம் இயக்குநர்களை தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ள முடிவெடுத்த முன்னணி நடிகர்கள், தொடர்ந்து அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் ஜொலித்த இரண்டு இயக்குனர்கள் என்றால் அது வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தான்.
வெற்றிமாறன் தனது அடுத்தடுத்த படங்களை விஜய் மற்றும் சூர்யாவை வைத்து எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. லோகேஷ் கனகராஜ், தளபதி 64 படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் படங்களை இயக்கப் போவதாகவும் தெரிகிறது.
இதனால் பழைய கமர்சியல் இயக்குனர்களை இனி தயாரிப்பாளர்கள் நம்புவார்களா என்பது சந்தேகம்தான்.
வினோத் தற்பொழுது தொடர்ச்சியாக இரண்டாவது முறை தல அஜித்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
