நடிகர் சங்க பொதுக்குழுவை முன்னிட்டு வருகிற ஞாயிருன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

Nadigar Sangam-Meeting-March20-All Shootings are Cancelledதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.

இது, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நடிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பொதுகுழுவிற்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் நடிக பூபதி அமரர் பி.யு.சின்னப்பாவின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல், அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படவிருக்கிறது. அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரி வெளியீடு மற்றும் “இணையதளம்” வெளியீட்டும் நடைபெறவிருக்கிறது.மேலும், தங்களது வாழ்கையை நாடகத்துறைக்கு அர்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவித்து சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருதுமற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.

துணை தலைவர் கருணாஸ் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்பிக்க உள்ளார். பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொது செயலாளர் விஷால், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் விளக்கி உரையாற்ற உள்ளார். உறுபினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று நடிகர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Comments

comments

More Cinema News: