தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் பொருட்டு நிதி திரட்டும் நோக்குடன் இந்த நட்சத்திர கலைவிழா ஜனவரி மாதம் 5ஆம் தேதியும், 6-ஆம் தேதியும் மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகளும் நடை பெருமாம்.

மேலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் உட்பட அணைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதனை முன்வைத்து  ஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளுக்கும் விடுமுறை விடுமாறு  நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் வேண்டுகோள் கடிதம்  அனுப்பியுள்ளது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளார்கள்.