தெறி படத்தை எப்போதும் திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து மாபெரும் சாதனைகளை படைத்து வருகின்றது.

சமீபத்தில் தெறி படத்தை பற்றி பேசிய அட்லீ ‘இது முழுக்க முழுக்க மாஸ் நிறைந்த படம், ரசிகர்களை மிகவும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்.

மேலும், இப்படத்தில் விஜய் தன் ரசிகர்களுக்காக கடும் சண்டைக்காட்சிகளை கூட டூப் இல்லாமல் நடித்துக்கொடுத்தார்.

நாளைய காட்சியை இன்றே கேட்டு அறிந்துக்கொண்டு, தன்னை தயார்படுத்திக்கொண்டு தான் படப்பிடிப்பிற்கே வருவார்’ என கூறியுள்ளார்.