நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் அதற்கு தான் மட்டுமே காரணம் என தளபதி விஜய் ஓபனாக தெரிவித்து இருக்கிறார்.

அஜித்தை அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருவது போல விஜயிற்கும் அதே அளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் சமூக வலைத்தளங்களில் இன்னும் தங்கள் ஃபேவரிட் நடிகர்களுக்காக புகழ்பாடுவதும், தல – தளபதி ரசிகர்களின் சண்டையும் ஓயாத கதையாகி விட்டது. வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர், பாடகி ஷோபனாவின் செல்ல மகன் என்ற அடையாளத்துடன் கால் பதித்தவர் விஜய். குழந்தை நட்சத்திரமாக அப்பாவின் இயக்கத்தில் மூன்று படங்கள், நாயகனாக 4 படங்கள் நடித்த விஜயிற்கு சரியான பாதை அமையவே இல்லை. இருந்தும் தன்னால் முடியும் என்று நம்பியவருக்கு கை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கத்தில் பூவே உனக்காக படம் தான் விஜய் என்ற நடிகரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது.

தொடர்ந்து, பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டின் இளைய தளபதியாக மகுடம் சூடினார். இருந்தும், விதி விடுமா என்ன? மீண்டும் தோல்விகள் அவரை துரத்தியது. தமிழன், புதிய கீதை படங்கள் நல்ல கதை களத்தை கொண்ட போதும் தோல்வியை பெற்றது. இருந்தும், அசராமல் ஓடியவருக்கு இன்றும் தேசிய அளவில் அங்கீகாரம், மெர்சல் படத்தின் மூலம் தளபதி அந்தஸ்து என அசத்தி விட்டார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய விஜய், என் தோல்வி படங்களுக்கு நான் தான் முழு காரணம். இயக்குனர்கள் இல்லை. அப்படம் எடுத்த நேரம், ரிலீசான நாள் என அன்றைய ட்ரெண்டுக்கு ஒத்துவராமல் போய் இருக்கலாம். கண்டிப்பாக இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. யாரையுமே குறை சொல்ல கூடாது எனத் தெரிவித்து இருக்கிறார்.