fbpx
Connect with us

Cinemapettai

இங்கே இவ்வளவு பிரச்சனை நடக்குது, அந்த அட்லீ எங்க? முதல்ல அவர புடிங்க.. கைகாட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இங்கே இவ்வளவு பிரச்சனை நடக்குது, அந்த அட்லீ எங்க? முதல்ல அவர புடிங்க.. கைகாட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்

தளபதி விஜய் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோரின் மீது ஐடி ரெய்டு நடந்ததற்கு காரணமே அட்லீ தான் என ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அவர்கள் கூறுவதை பார்த்தால் ஒரு விதத்தில் நியாயமாகத்தான் தெரிகிறது. தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட செலவுகளை வைத்ததே இவ்வளவுக்கும் காரணம் என மொத்தமாக அட்லீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் உருவான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தார். படமும் வெளியாகி ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. பிகில் படம் நல்ல லாபத்தை தந்தாலும் அட்லீ மீது தயாரிப்பு நிறுவனம் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

இரண்டு மணிநேர படத்திற்கு தேவையே இல்லாமல் ஐந்து மணி நேர அளவிற்கு படக்காட்சிகளை ஷூட் செய்துள்ளாராம். அதில் யோகி பாபு ஆனந்தராஜ் போன்ற முக்கிய நடிகர்களின் காட்சிகள் பெரும்பாலும் இருந்ததாம். நம் காட்சிகள் அனைத்தும் படங்களில் இருக்கும் என அட்லீயை நம்பி ஆனந்தராஜ் பிகில் படத்திற்கு மிகவும் சப்போர்ட் செய்து விட்டார்.

படம் வெளியான பிறகு ஆனந்தராஜ் பிகில் படத்தில் நடித்தார் என்ற அளவுக்கு கேள்விகளில் எழ ஆரம்பித்துவிட்டது. உண்மையாலுமே ஆனந்தராஜ் படத்தில் இருந்த சுவடே தெரியாமல் செய்துவிட்டார் அட்லீ. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆனந்தராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சம்பளமே கிட்டத்தட்ட 8 முதல் 10 கோடி வரைக்கும் செலவு செய்துள்ளாராம். அந்த அளவுக்கு நடிகர்களை வைத்துப் படத்தை எடுத்துவிட்டு பின்னர் அனைத்தையும் கட் செய்துவிட்டாராம்.

தளபதி விஜய்யிடம் கிட்டத்தட்ட 100 நாட்கள் கால்ஷீட் வாங்கி விட்டு பிறகு மீண்டும் 40 நாட்கள் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கியதாகத் தெரிகிறது. இதனாலேயே விஜய்க்கு அட்லீ மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரின் பொறுப்பில்லாத மற்றும் கொஞ்சம்கூட பிளான் செய்யாத படப்பிடிப்பே இவ்வளவுக்கும் காரணம் என தயாரிப்பு தரப்பு அட்லீயை தேடியதாம்.

ஆனால் அவரோ தற்போது மும்பையில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். எப்போது சென்னை வருவார் என ஐடி டிபார்ட்மெண்ட் காத்துக் கொண்டுள்ளது. ஏர்போர்ட்டில் வைத்து தூக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அட்லீயை நோண்டி நொங்கு எடுத்தால் விஜய்யை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என வெறிகொண்டு வெயிட் செய்கிறதாம் வருமான வரித்துறை.

சிறு வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top