Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இது கேட்ச் தானா? வைரலான பிக் பாஷ் வீடியோ.. நீங்களே சொல்லுங்க மக்களே

நம் ஊர் ஐபில் போல ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிரபல டி 20 லீக் தான் பிக் பாஷ். அதிரடி பேட்டிங், அதிவேக பௌலிங், கலக்கல் பீல்டிங் கூடவே கொஞ்சம் கிளாமர் என கலைகட்டும் இந்த தொடர். இந்நிலையில் சென்றவாரம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மாட் ரென்ஷா பிடித்த கேட்ச் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் டீம் கேப்டன் மாத்யூ வேட் 61 ரன்கள் எடுத்திருந்த நேரத்தில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி வீரர் வீசிய பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த நேரத்தில் பௌண்டரிக்கு அருகில் இருந்த ரென்ஷா கேட்ச் பிடித்தார், பின் பவுண்டரி எல்லைக்குள் நுழைந்தார், பந்தை சக வீரரிடம் தூக்கி ஏறிந்தார், அவரும் கேட்ச் பிடித்தார். அனைவரும் இது நாட் அவுட் என நினைத்த நேரத்தில் பல அலசலுக்கு பின் நடுவர்கள் விதிப்படி இது அவுட் என சொல்லினர்.

அட ஆமாங்க கடந்த 2017 ல் புதுப்பிக்கப்பட்ட கிரிக்கெட் விதிபடி, இது அவுட் தானம். முதலில் ரென்ஷா பந்தை பௌண்டரிக்கு வெளிய தான் பிடித்துள்ளார். மேலும் அவர் வெளிய சென்ற சமயத்தில் கால் தரையில் பட்ட சமயத்தில் பந்து அவர் கையில் இல்லை. எனவே law 19.4, 19.5 படி அவுட்.

இந்த கேட்சை கேட்ச் மற்றும் அதன் விதிமுறையை சமூக வலைதளத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top