Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெங்கட் பிரபுவை எல்லோருக்கும் பிடிக்க காரணம் இது தான்! ரசிகனின் கேள்விக்கு தகுந்த பதிலடி

நேற்று அனைவரும் இசையமைப்பாளர் இமான் அவர்கள் இசையமைத்த 100வது படமான டிக் டிக் டிக் படத்திற்கு திரைபிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் தெரிவித்தனர்.
அதைப்போல் வெங்கட் பிரபுவும் தனது வாழ்த்தை தெரிவித்தார். யுவனின் 100வது படத்தை தான் இயக்கியதாகவும் அதைப்போல் உங்களது 100வது படத்தை என்னிடம் உதவி இயக்குனராக இருந்த சக்தி செளந்தர் ராஜன் இயக்கி இருக்கிறார் வாழ்த்துகள். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
மேலும் நீங்கள் கடவுள் ஆசி பெற்று பல சாதனைகளை படைக்க வேண்டும் என டிவிட் செய்தார்.நம்ம அரைவேக்காடு டிவிட்டர் வாசி ஒருவர் அது எப்படி உங்களை விட உங்களிடம் இருந்து இயக்குனறான அனைவரும் திறமையானவர்களாக இருக்கின்றனர் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு உண்மை தான் அதனால் தான் ரொம்ப பெருமை கொள்வதாக டிவிட் செய்தார். அந்த ரசிகனுக்கு மேலும் பாடம் புகட்ட இதை கண்ட சக்தி செளந்தர் ராஐன் நாங்கள் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதை பெருமையாக கருதுகிறோம் என ரீ டிவிட் செய்தார் .
ஒருவரை ஒருவர் பாராட்டுவது விட்டுக்கொடுக்காமல் அரைவனைப்பது இது தான் வெங்கட் பிரபுவை அனைவரும் நேசிபதற்கு காரணமாக இருக்க கூடும் இதோ அந்த டிவிட் உறையாடல்.
