புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

9 இடங்களும் ஷிவினுக்கு தகுதி இல்லை.. ஒரே டாஸ்கால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து சண்டையும், சச்சரவுமாக இருந்த பிக் பாஸ் வீடு இரண்டு வாரங்களாக மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் பிக் பாஸ் ஒரு தீக்குச்சியை கொளுத்தி போட்டு உள்ளது.

அதனால் இப்போது பிக் பாஸ் வீடு பத்தி எரிகிறது. அதாவது அனைத்து சீசங்களிலுமே ரேங்கிங் டாக்கில் கண்டிப்பாக சண்டை வரும். அப்படி இருக்கையில் இந்த சீசனில் சொல்லவா வேண்டும் ரேங்கிங் டாஸ்க் என்றதும் போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு இந்த இடம்தான் வேண்டும் என அடித்துக் கொள்கிறார்கள்.

Also Read : அநீதி வீழும் அறம் வெல்லும்.. விக்ரமனுக்காக போராடியதற்கு கிடைத்த வெற்றி

ஆரம்பத்தில் முதல் இடத்திற்கு வந்த அசீம் நிற்கிறார். ஆகையால் இவருக்கும் விக்ரமனுக்கும் இடையே சண்டை வருகிறது. அந்த சமயத்தில் அமுதவாணன் மற்றும் அசிமுக்கு இடையே ஆன சண்டையை விக்ரமன் கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அசீம் கத்துகிறார். இது ஒரு புறம் இருக்க ஏ டி கே மற்றும் சிவின் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

இதில் ஆவேசத்தில் ஏடிகே முதல் ஒன்பது இடமும் சிவினுக்கு தகுதி இல்லை என்று சொல்லி பத்தாவது இடத்தில் நிற்குமாறு கூறுகிறார். இதனால் சிவின் கோபமாகி கத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்கள் இடமும் இந்த டாஸ்கினால் சண்டை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.

Also Read : 40% ஷேர் வாங்க இவ்வளவு ஆட்டமா கிழவிக்கு.? சத்தம் இல்லாமல் சோலியை முடிக்க போகும் குணசேகரன்

கடைசியில் இந்த ரேங்கிங் டாக்கை இவர்களுக்குள் முடிப்பதற்குள் கைகலப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி அசீம் மற்றும் விக்ரமன் இடையே தான் சண்டை வெடிக்கிறது. அதுவே அசிமுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுக்க விக்ரமன் தான் வருகிறார். மேலும் இன்றைய எபிசோடு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று இந்த ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இதில் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் டாமினேஷன் ஃப்ரீ ஆகியுள்ளதால் இந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தனலட்சுமி முதல் ஐந்து இடங்களில் வருவதற்காக சண்டையிடவும் வாய்ப்பு உள்ளது.

Also Read : டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

- Advertisement -

Trending News