fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அலிடா: பேட்டில் ஏஞ்சல் – திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

அலிடா: பேட்டில் ஏஞ்சல் – திரைவிமர்சனம்.

அலிடா: பேட்டில் ஏஞ்சல்

ஹாலிவுட்டில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே மிகவும் எதிர்பார்ப்புடன் பலர் காத்திருந்த படம். ஜப்பானின் யுகிடாகி கிஷிரோவின் புகழ்பெற்ற மங்கா காமிக்சில் இருந்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் எதிர்பார்ப்பு உயர முக்கிய காரணம் என்னவென்றால் ஜேம்ஸ்  கேமரூன் அவர்கள் ஜோன் லாண்டு இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்துக்கு கேமரூன் மற்றும் லாட்டா கலோரிடிஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதயுள்ளனர். ராபர்ட் ரோட்ரிக்ஸ் (ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி ) இயக்கியுள்ளார். ரோசா சலாசர் தான் அலிடா என்ற டைட்டில் ரோலில் நடித்துள்ளார்

கதை

2563 யில் உலகப்பேரழிவு போருக்கு பின் நடக்கும் கதை. மனிதர்கள், சைப்ராக் என வாழ்ந்துவருகின்றனர். கீழே போராட்டம் நிறைந்த உலோக நகரம். மேலே வானத்தில் வசதி பொருந்திய சாலேம் என இரண்டு வகையில் உள்ளது.

கிறிஸ்டோப் வாட்ஸ் உலோக குப்பையில் இருந்து ஒரு பெண் ரோபோவின் தலையை கண்டெடுக்கிறார். உயிர் இருப்பதாய் உணர்ந்து அதற்கு தன மகளின் கை, கால், உடம்பு பொருத்துகிறார். அதோடு மனித உணர்வுகளையும் அதற்குள் செலுத்துகிறார். பின்னர் தன் மகளின் பெயரையே வைத்து அலிடா என ரெடி செய்கிறார்.

Alita

அலிடா தன்னைப் பற்றிய முந்தைய நினைவுகள் அழிந்த நிலையில் உள்ளாள். ஹியூகோ என்ற வாலிபனுடன் காதல் என்று செல்கிறது படம். ஒரு காலக் கட்டத்தில் தனது முழு திறனையையும் அலிடா உணருகிறாள். அதுவரை அழகு பதுமையாக இருந்தவள் தான் 50 வருடங்களுக்கு முந்தைய ஒரு போராளி என்பதை உணர்கிறாள். தீய சக்திகளுக்கு (நோவா) எதிரான தன் போரை மீண்டும் தொடங்குகிறாள்.

பிளஸ்

இசை, கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், ஹீரோயின் ரோசா சலாசர் நடிப்பு

மைனஸ்

குழப்பும் விதமான திரைக்கதை, வில்லனுக்கு கொடுத்த பீடிகை, அப்படியே தீடீர் என முடியும் கதை.

Alita

சினிமாபேட்டை அலசல்

மங்கா அலிடா பற்றிய விஷயம் தெரிந்து செல்பவர்கள் மேக்கிங்கை ரசிப்பர். ஆக்ஷன் படம் பார்க்கலாம் என செல்பவர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை தரும். அடுத்தடுத்த பாகங்கள் வெளிவர பல கிளை கதை அம்சங்களை புகுத்தியுள்ளனர் இந்த டீம். எனினும் இந்த பார்ட்டில் தெளிவான திரைக்கதை மற்றும் கதையை புகுத்தி இருந்திருக்கலாமோ என்ற சிறு எண்ணம் படம் முடியும் சமயத்தில் வருவதை தவிர்க்க முடியாது தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top