இந்தியாவின் முதல் பெண் பைக் ரேசர் அலிஷா அப்துல்லா என்பதும் இவர் அதர்வா நடித்த ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் தனக்கு காட்பாதர் என்று அஜித்தை ஒரு பேட்டியில் அலிஷா அப்துல்லா கூறியுள்ளார். தான் நான்கு வயதாக இருக்கும்போதே அஜித்துடன் புகைப்படம் எடுத்திருப்பதாகவும், பைக் ரேஸ் சாம்பியன் ஆன பின்னர் அஜித் தனக்கு பலமுறை அறிவுரை சொல்லியிருப்பதாகவும் தான் இந்த அளவுக்கு சாதனை செய்ய தனது தந்தையும் காட்ஃபாதர் அஜித்துமே காரணம் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ரெக்கார்டை தடுக்க ஒரு வழி.. விஜய் ரசிகர்களின் சூழ்ச்சியா? அடங்காத கோபத்தில் அஜித் ரசிகர்கள்..

மேலும் அஜித்துடன் இதுவரை ரேஸ் செய்ததில்லை என்றும் இருவருமே பிசியாக இருப்பதால் அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை என்றும் ஆனால் விரைவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  மனதை தொடும் பின்னணி பாடல்.! விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.!

அலிஷா அப்துல்லா தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சைத்தான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.