ராஜமவுலி இயக்கும் படத்தில் வெள்ளைக்கார நடிகை

நான் ஈ, பாகுபலி உள்பட பல படங்களி இயக்கியவர் ராஜமௌலி. இவர் ஆர்ஆர்ஆர் என்பற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய அல்லுரி சீதாரமலு, கெமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை கற்பனையாக எழுதியுள்ளார் ராஜமௌலி.

சுதந்திர போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக கதைப்படி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நடிக்க வேண்டும்.

அதற்காக இங்கிலாந்து நடிகை எட்ஜர் ஜோன்ஸ் என்பவர் நடிக்க தேர்வானார், ஆனால் அவர் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகி விட்டார், அவருக்கு பதில் மற்றொரு இங்கிலாந்து நடிகையான ஒலிவியா மோரிஸ் நடிக்க உள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கிறார்.

இந்த படத்தில் பார், தோர், கிங் ஆர்தர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன்சன் நடிக்கிறார்.இதேபோல் அலிசான் என்ற ஹாலிவுட் நடிகரும் நடிக்கிறார்.இவர் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளவர் ஆவார்.

alia-bhutt
alia-bhutt

Leave a Comment