அட ஆமாங்க சத்தியமா இது சாத்தியமா? என்று தான் நாங்களும் கேக்கிறோம்.

பாலிவுட்டில் மிக பிரபலமான தயாரிப்பாளர்,டைரக்டர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட்.  இவர் 1999ல் திரில்லர் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் 2012ல் ஸ்டுடென்ட் நம்பர் 1 படம் வாயிலாக கதாநாயகி அந்தஸ்தை பெற்றார்.

இதுவரை 15 படங்களே நடித்திருந்தாலும் காதல், ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் என்று அணைத்து ஜானர்களிலும் நடித்துவிட்டார். வாய்ப்பு வரும் அனைத்து ரோல்களையும் பண்ணமால், கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவர் என்ன செய்தாலும், சொன்னாலும் இவரை ட்ரோல் செய்ய ஒரு கூட்டமே உள்ளது, அதை துளியும் பொருட்படுத்தாதது தன் மனம் போகிற போக்கில் இருப்பவர் தான் ஆலியா. இந்த குணாதிசியத்துக்காகவே இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

அதிகம் படித்தவை:  26 சர்வதேச விருதுகளை வென்று உலக அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிர செய்த படம்.!

இவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் சொல்லிய விஷயங்கள் ” ஆண்களுக்கு மட்டும் வயது முதிர்ந்தாலும் நடிக்க கதைகள் தயார் செய்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, இளமை காலங்களில் கதாநாயகி, பின்னர் அம்மா ரோல்களில் தான் நடிக்க முடிகிறது. வேறுவிதமாக எந்த வித்யாசமான முயற்சியையும் , நம் இயக்குனர்கள் மேற்கொள்வது இல்லை. இதனால் நடிகைகள் ஒரு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படுகிறது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்பே கிடைத்தால் 90 வயது வரை நடிப்பேன்.” என்றார்.

Alia Bhatt Suffered Burns on Her Elbow

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்: இவர் இவ்வாறு கூறியதும்,”உங்கள் தந்தையையே கதை ரெடி பண்ண சொல்லி நடிக்க வேண்டியது  தானே?”  என்று  நம் நெட்டிசன்கள் இவரை வருடத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.