ஆலியா பட்

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர். 25 வயதாகும் இவர் இயக்குனர் மகேஷ் பட்டின் மக்கள் ஆவர். ஆரம்பகாலங்களில் இணையத்தில் இவரின் நடிப்பு மற்றும் பேச்சால் பலரின் கிண்டலுக்கு உள்ளானார். பின்னர் நல்ல கதை தேர்வு, சிறந்த நடிப்பை ஹைவே, உட்தா பஞ்சாப் , டூ ஸ்டேட்ஸ் போன்றல் படங்களின் வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ராஸி (Raazi)

ராணுவ அதிகாரியான ஹரிந்தர் எஸ் சிக்கா எழுதிய ‘காலிங் ஷெமத்’
(Calling Sehmat) என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு, இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மேக்னா குல்ஸார். 1971 இல் இந்தியா- பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை மணந்து இந்தியாவுக்கு உளவுத் தகவலைக் கொடுத்த காஷ்மீரிப் பெண்ணின் கதாபாத்திரத்தில் ஆலியா நடித்துள்ளார்.

ராஸி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.