India | இந்தியா
குறைவான போதை.. நிறைவான சந்தோசம்.. குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி
சாக்கு வச்சு சரக்கு அடிக்கும் நமது குடி மக்களுக்காக ஒரு நற்செய்தி காத்துக் கொண்டுள்ளது. அந்த விஷயத்தை செய்தால் 24 மணி நேரமும் குடிக்கலாம், அதே நேரத்தில் நிதானமாகவும் இருக்கலாம் என்பதுதான் மேட்டர்.
அது எப்படி பண்ணுவீங்க? சொல்லுவோம்ல
எப்போதுமே கேரளா மாநிலத்தில் மது வகைகளில் ஒரு வகையான ஒயின் தயாரிப்பு அதிகமாகவே இருக்கும். சில பெண்கள் வீட்டிலேயே தயாரிக்கவும் செய்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மது தயாரிப்பு நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் இருப்பதால் போலியான சரக்கு வகைகளே மக்களை சென்றடைகின்றன. அதையும் குடிச்சிட்டு நம்மாளுக பண்ற அலப்பறை இருக்குதே ஐயோயோ.
இதற்கு விடுதலையாக கேரளாவில் பலா, முந்திரி, வாழைப் பழங்களைக் கொண்டு குறைந்த அளவு ஆல்கஹால் உள்ள மது பானங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில கலால் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இனி என்ன… ஆட்டம் தான்..
