அந்த நடிகை எம்.ஜி.ஆர் காலத்தில் அறிமுகமான மங்களகரமான பெயர் கொண்ட நடிகை.

தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் என 5 மொழிகளிலும் பட்டையைக் கிளப்பியவர். இதோ இப்போது வரை கன்னடப் படங்களில் பெரிய ஹீரோவின் மகன் படங்களில் அம்மாவாக நடித்து தூள்கிளப்புகிறார்.

திருமணங்கள் எல்லாம் தோற்றுப் போனது.    கடைசியாய் ஒரே தொழிலில் உள்ள பிரகாசமானவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு ஒரு மகன், மகள். மகன் சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக இறக்க இவரின் பெண் நடிக்க வந்தார்.

கட்டுக்கடங்காத பணம். செல்வச்செழிப்பு. ஓவர் செல்லம் இதெல்லாம் நடிக்க வரும் முன்பே அதிகம். நண்பர்களும் அதிகம். அதிலும ஆண் நண்பர்கள் எக்கச்சக்கம்.

எல்லா பழக்கங்களும் வந்து ஒட்டிக்கொண்டது. நிறுத்த இயலவில்லை. நடிக்கவந்து ஓரிரு படங்களில் நாயகி ஆனார்.

இன்னும் சுதந்திரம். கைநிறைய சம்பளம். நண்பர்களுடன் ஊர் சுற்றி  குடிக்கு முற்றிலும் அடிமையானார் வாரிசு நடிகை.

தாய்க்கு அரசல் புரசலாக தெரிய மகளை கண்டித்தார். அடங்கவில்லை. காதலனுடன் வெளியேறினார்.

கொஞ்சகாலம் ஓடியது பிரிந்து நடுத்தெருவில் நின்றார் நடிகை. குடிக்காமல் கை கால்கள் நடுங்கியது. வாய் குழறியது. தாய் பதறிப் போய் மகளை அழைத்து வந்துகூடவே   வைத்துக் கொண்டார்.

குடியை நிறுத்த ஒரு தனியார் குடி மீட்பு மருத்துவமனையில் சேர்த்தார். இரவெல்லாம் மது கேட்டு அடம் பிடித்து ரகளை செய்தார் வாரிசு நடிகை. ஊழியர்கள் சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்தார்கள்.

சிவந்த உடல்  எங்கும் காயங்கள் தழும்புகள். அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.

ஒரு மாதம் அடிக்கு பயந்து அமைதியானார். மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.  2 வருடங்கள் ஆயிற்று.

மகளை மீண்டும் குடி தொற்றி விடக்கூடாது என்று பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார் தாய் நடிகை. அதன் பின்னரும் சில சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

ஓவர் செல்லம், கவனிப்பு இல்லை, கண்டிப்பு இல்லை, இன்று கண்ணீர் வடிக்கிறார் தாய்.