பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் படம் தோல்வியடைய காரணம் இதுதான்.. வெளிப்படையாக சொன்ன பிரபலம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே புதுமைகளை புகுத்தி பார்ப்பதில் மிகவும் முக்கியமானவர் கமலஹாசன். ஆண்டவர் என்று சும்மாவா சொல்கிறார்கள். வெளிநாடுகளில் எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை முதலில் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவருவதில் கில்லாடி இவர்.

அதுமட்டுமில்லாமல் பலரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சினிமா நுண்ணறிவுகளைக் கொண்டவர். தன்னுடைய படங்களில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்க வேண்டுமென மெனக்கெட்டு உருவாக்குபவர். இதனாலேயே கமல்ஹாசன் காலம் கடந்தும் போற்றப்படுகிறார்.

ஒரு சில சமயம் கமல் எடுக்கும் முயற்சிக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததுள்ளது. ஆனால் பல சமயம் அவருடைய புதிய முயற்சிகள் தோல்வியை சந்தித்தன. அந்த வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம் என்றால் ஆளவந்தான் திரைப்படம் தான்.

அன்றைய காலத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான திரைப்படம். மேலும் ரஜினிக்கு பாட்ஷாவை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தாலும் கதைக்கரு மற்றும் திரைக்கதை கமலுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்தும் பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் திரைப்படம் தோல்வி பெற்றதற்கு காரணமே அதனுடைய திரைக்கதை ஓட்டம் சரியாக அமையவில்லை என்பது தானாம். ஒரு படத்தின் கதைக்கரு சரியாக இருந்தாலும் அந்தக் கருவை எடுத்து செல்ல வேண்டிய திரைக்கதை சரியாக இருந்தால் மட்டுமே படம் ரசிகர்களை கவரும்.

ஆனால் அதை ஆளவந்தான் திரைப்படம் செய்ய தவறி விட்டதாம். இந்த படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று வியந்தாலும் பெரும்பாலும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் படம் புரியவில்லை என்பது தான் உண்மை கருத்தாக இருந்ததாம். மேலும் சலிப்படைய வைக்கும் திரைக்கதை படத்திற்கு மேலும் சோதனையை கொடுத்ததால் அன்றைய காலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படங்களில் முக்கிய இடத்தை பெற்றதாம் ஆளவந்தான். இதனை சித்ரா லட்சுமணன் என்ற பிரபலம் ஓப்பனாக கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்