ALVijay_NationalAward

இந்த வருடத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் தமிழில் சிறந்த படம் என்று ஜோக்கர் படத்துக்கு கிடைத்துள்ளது. அதோடு அப்படத்தில் இடம்பெற்ற ஜாஸ்மீன் என்ற பாடலைப் பாடிய சுந்தர் ஜயருக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது, 24 படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, தயாரிப்பு வடிவமைப்புக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது விவரங்களை பார்த்த பல பிரபலங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேசிய விருது பின்னணியில் ஏ.எல். விஜய் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

தேசிய விருது தேர்வுக் குழுவிற்கு ஜுரியாக இருந்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். இவரின் உதவியாளராக இருந்த இயக்குனர் ஏ.எல். விஜய் மூலம் பிரியதர்ஷனை சந்தித்த சிலருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.