தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது.

இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கபட்டது.

இந்நிலையில் தனுஷின் வடசென்னை படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக தெரிகிறது.

ஆனால் தனுஷ் அதை கேட்காததால், இந்த பஞ்சாயத்து ரஜினிகாந்த் வரை சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.