“என்ஜாய் எஞ்சாமி” பாடலை ஓரங்கட்ட போகும் புதிய ஆல்பம்.. காதலர்களுக்காக உருவான பாடல்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆல்பம் சாங் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன அதற்கு காரணம் ரசிகர்கள் ஆல்பம் பாடலை கொண்டாடுவதுதான். சமீபத்தில் வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் பல மில்லியன்களை கடந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதனால் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் தற்போது ஆல்பம் பாடல்கள் பணியாற்றுவதற்கு களமிறங்கியுள்ளனர். “ஒரு வினா ஒரு விடை” ஆல்பத்துக்கு ஆர்எஸ் ரவிப்ரியன் இசையமைத்துள்ளார். செந்தமிழ் பாடலை எழுதியுள்ளார்.

oru vina oru vidai
oru vina oru vidai

இப்பாடலை பாடுவதற்கு பாலிவுட் சிங்கர் நேகா ஹார்ட்வார், சல்மான் உஸ்மானி பாடியுள்ள இந்த ஆல்பத்தில் ஸ்ரீஹரி, ஸ்ரீமதி கார்த்திக் நடித்துள்ளனர். சிங்கிள் ட்ராக் வரலாற்றிலேயே முதல் முறையாக முன்னணி திரைப்பட இயக்குனரான ஏ எம் ராஜா பாடலுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இவர் பார்த்திபன், வடிவேலு மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான நினைக்காத நாளில்லை படத்தை இயக்கியுள்ளார். சாய்ராம் இந்த ஆல்பம் பாடலை இஷிதா மீடியாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். 

லாக் டவுன் முடிந்த பிறகு இயக்குனர்கள் யூனியனின் மூலம் பல இயக்குனர்கள் முன்னிலையில் இந்த ஆல்பத்தின் வீடியோவை பிரத்தியேகமாக திரையிட திரையிட உள்ளதாக கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தப்பாடல் வெளியானதும் பல இளைஞர்களின் ரிங்டோனாக அமையும் என்றால் அது மிகையாகாது என்கிறார் ரவி பிரியண்.

- Advertisement -spot_img

Trending News