Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தமிழ் படத்தில் அக்ஷய் குமார்.. அதுவும் யாருடன் தெரியுமா?
2.O படத்தில் அக்ஷய்குமார் பங்கு மிகப்பெரியது. அவர் இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு மேக்கப் போட்டு நடித்திருந்தார். ரஜினிக்கு இணையான வேடம் என்றாலும் ஒரு சில காட்சிகளில் அவரையும் மிஞ்சி விடுவார் என்பது போல் தெரிகிறது. இனிமேல் அவர் தமிழ் சினிமாவை விடுவதில்லை. மேலும் சில படங்களில் நடிப்பார் என்றும் பேசுகின்றனர். சங்கரின் இயக்கத்தை பார்த்து பிரமித்துப் போனார். அவர் இயக்குனர்களின் சயின்டிஸ்ட் என்று பெயர் சூட்டினார்.
இந்தக்கதை ஒருபுறமிருக்க அடுத்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிகை இருப்பதாக கூறுகின்றனர். ரஜினி நடிக்கும் படத்தில் ரஜினிக்கு இணையான வேடம் கமலுடன் நடிக்கும் போது அதற்கு இணையான வேடம் ஆகத்தான் இருக்கும். ஆனால் ஹீரோவுக்கு நல்லவனாக நடிப்பது கஷ்டம், வில்லனாக நடித்தால் தான் அதற்கு இணையாக இருக்க முடியும். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருப்போம்.
கமலஹாசன் சினிமா அரசியல் என ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளில் இருக்க, இந்த படங்களை எல்லாம் எப்படி முடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. அதற்குள் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் அவர் சினிமாவில் நடிப்பாரா என்பது போக போகத்தான் தெரியும்.
