சந்தன கடத்தல் வீரப்பன் விஷம் கொடுத்த பிறகு சுட்டுக்கொலை..? மனம் திறந்த நடிகர் அக்சய்குமார்..!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் குறித்து, வீரப்பன் – சேசிங் த பிரிக்கன்ட் என்ற நூலை முன்னாள் அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எழுதியுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை நூலில் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌சய் குமார் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

பிறகு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இதில் வீரப்பன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும் சுவாரசியமானவை. இதனை படமாக எடுக்க வேண்டும். அவ்வாறு படம் எடுக்கப்பட்டால் நான் விஜயகுமார் வேடத்தில் நடிக்கவே ஆசைப்படுறேன்.

ஏனெனில் அவர் தான் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் தீட்டி வீரப்பனைப் பிடித்தார். தமிழ், இந்தியில் படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.இது குறித்து விஜயகுமார் தெளிவாக நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

Comments

comments

More Cinema News: