Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஆர்யாவின் “கலாபக்காதலன்” பட நடிகை .
இன்று ரொமான்டிக் , சாக்லேட் பாயாக ஆர்யா வளம் வருவதற்கு பல படங்கள் காரணம், அதில் முக்கியமான ஒரு படம் கலாபக்காதலன். இப்படத்தினை எஸ் ஜே சூர்யாவின் வாலி பட லேடீஸ் வேர்சின் என்று கூட சொல்லலாம். ஆர்யா (அகிலன்) ரேணுகா மேனன் (அன்பரசி) புது மன தம்பதிகள் ஆக நடித்திருப்பார்கள்.

Klaba
ஹீரோயினின் தங்கையாக, ஆர்யா மேல் மோகம் கொண்ட கதாபாத்திரத்தில் அக்ஷ்யா (கண்மணி) நடித்திருப்பார்.

Akshaya
அக்ஷ்யா
பல லோ பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். எனினும் தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை கலாபக்காதலன் தான் இவரின் முகவரி. எங்கள் ஆசான், உளியின் ஓசை, கோவில்பட்டி வீரலட்சுமி, பார்த்திபன் கனவு, உயர்திரு 420 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

YAALI
யாளி
இப்படத்தில் தமன் என்பவர் கதாநாயகனாக நடிக்க, அக்ஷயா கதாநாயகியாக நடித்து படத்தை இயக்கி வருகிறார். ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் இப்படம் தயாராகிவருகிறது. மும்பை பின்னணியில் இப்படத்தின் கதை நகருமாம். கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டதால், விரைவில் ட்ரைலர், பாடல்கள் வெளிவரும். அநேகமாக ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகலாம்.

YAALI
‘யாளி’ படத்திற்கு எஸ்.ஆர்.ராம் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வி.கே.ராமராஜு கவனித்துள்ளார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.
